தி.வேல்முருகன்

தி.வேல்முருகன்
தி.வேல்முருகன்

Wednesday, April 6, 2011

நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி)

நெய்வேலி கடலூர் மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தமிழகத்தின் முதன்மையான அனல்மின் நிலையம் மற்றும் நிலக்கரி சுரங்கம் இங்கு அமைந்துள்ளது.
கடலூர் மாவட்டத்திலேயே குறைந்த வாக்காளர்களை கொண்ட சிறிய தொகுதியாக நெய்வேலி கருதப்படுகிறது. நெய்வேலி தொகுதியில் தற்போது 1 லட்சத்து 61 ஆயிரத்து 807 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 83,277 ஆண் வாக்காளர்களும், 78, 500 பெண் வாக்காளர்களும் உள்ளனர். நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் இருப்பதால் நெய்வேலி டவுன்ஷிப் முழுவதும் ஆயிரக்கணக்கான என்.எல்.சி. ஊழியர்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் மூலம் நெய்வேலி பகுதியை சேர்ந்த மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகிறார்கள். பண்ருட்டி பகுதியில் முந்திரி விவசாயமே முக்கிய மூலதனமாகும். இங்கு விளையும் முந்திரிகள் வெளிமாநிலங்கள் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.


தொகுதி எல்லைகள்

பண்ரூட்டி வட்டம் (பகுதி) பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, சிறுவத்தூர், எலந்தம்பட்டு, திருவாழூர், விசூர், கருக்கை, செம்மேடு, மேலிருப்பு, கீழிருப்பு, தாழம்பட்டு, காடாம்புலியூர், மேல்மாம்பட்டு, புறங்கனி, கீழ்மாம்பட்டு, அழகப்பசமுத்திரம், சிலம்பிநாதன்பேட்டை, புலியூர் (மேற்கு), கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், வேகாக்கொல்லை, மருங்கூர், வல்லம், நடுக்குப்பம், பேர்பெரியான்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், வீரசிங்கன்குப்பம், காட்டுக்கூடலூர், சொரத்தூர், வெங்கடாம்பேட்டை, வானதிராயபுரம் மற்றும் தென்குத்து கிராமங்கள், நெய்வேலி (டவுன்ஷிப்).

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் நெய்வேலி சட்டசபைத் தொகுதி அடங்கியிருக்கிறது.
நெய்வேலி தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் தி. வேல் முருகன். அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

Tuesday, April 5, 2011

தி. வேல்முருகன் சாதனைகள்.

பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் சாதனைகள்.

பண்ரூட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருமுறை வெற்றிபெற்று சாதனைகள் பல படைத்தவர் தி. வேல்முருகன். சட்டமன்ற தொகுதி சீரமைப்பால் இப்போது அவரது தொகுதி நெய்வேலி சட்டமன்ற தொகுதி ஆகியுள்ளது.

தி. வேல்முருகன் சட்டமன்ற உறுப்பினராக 2001- 2006 மற்றும் 2006- 2011 இல் படைத்த சாதனைகளை இங்கே காணலாம்:
Velmurugan MLA Achievements

Saturday, April 2, 2011

பா.ம.க தேர்தல் அறிக்கை

PMK Menifesto 2011